ADVERTISEMENT

அமீரகத்தில் பனிக்கட்டிகளாக உறையும் அளவிற்கு -2 டிகிரி செல்சியஸிற்கு பதிவான வெப்பநிலை..!! வீடியோ வெளியிட்ட வானிலை மையம்..!!

Published: 9 Jan 2021, 2:33 PM |
Updated: 9 Jan 2021, 2:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலத்தை முன்னிட்டு பல இடங்களில் கடந்த சில நாட்களாக மிக குறைந்த வெப்பநிலையை பதிவாகி வருகின்றது. குறிப்பாக அமீரகத்தில் இருக்கக்கூடிய மலைப்பகுதியில் மிகவும் குறைந்த வெப்பநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்த வருடத்தின் முதல் முறையாக இன்று( ஜனவரி 9 சனிக்கிழமை) வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சுயிஸுக்கும் குறைவாக பதிவாகி இருக்கின்றது. அல் அய்னில் உள்ள ரக்னா வானிலை நிலையம் இன்று அதிகாலை 5.15 மணிக்கு -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக நிலவி வரும் குளிர் வெப்பநிலை குறித்து தேசிய வானிலை மையத்தின் (NCM) வானிலை நிபுணர் ஒருவர் கூறுகையில், “கிழக்கு மற்றும் வடகிழக்கில் இருந்து நகரும் குளிர் காற்று அமீரகத்தின் பாலைவனப் பகுதியை நெருங்குகிறது. இந்த காற்று அல் அய்னை அடைவதால் அனைத்து நிலையங்களிலும் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்ய வழிவகுக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

“ரக்னாவில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்தது, ஏனெனில் அந்த பகுதி பள்ளத்தாக்கு போன்றது. இந்த பகுதியில் உள்ள காற்று மற்ற எல்லாவற்றையும் விட குளிராகிறது. எனவே, ரக்னாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் மிகவும் குளிராக இருக்கின்றது” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அமீரகத்தின் புயல் மையம் இப்பகுதியில் அனைத்தும் பனிக்கட்டியாக மாறிய வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளது.

ரக்னாவில் வெப்பநிலை கடந்த வாரம் 1.9 டிகிரியை எட்டியது என்றும், அதே போன்று அல் அய்ன் மற்றும் மலைகளில் உள்ள பிற பகுதிகளும் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்துள்ளன என்று வானிலை நிபுணர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலையான ஜெபல் ஜெய்ஸ்-ம் (Jabel Jais) சமீபத்தில் 1.7 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.