ADVERTISEMENT

அமீரகத்தில் இன்றும் 3,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!! 6 பேர் உயிரிழப்பு..!!

Published: 13 Jan 2021, 10:50 AM |
Updated: 13 Jan 2021, 10:50 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவலின் போது கூட எட்டாத பாதிப்புகளின் எண்ணிக்கையை தற்பொழுது அமீரகம் தினமும் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில், அமீரகத்தில் நேற்று 3,000 க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகிய நிலையில் இன்றும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது 3,000 ஐ தாண்டியுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஜனவரி 13, 2021) புதிதாக 3,362 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 239,587 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இன்றைய நாளில் மட்டும் 2,588 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 213,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.