ADVERTISEMENT

UAE: மீண்டும் அமலுக்கு வரும் ‘Work From Home’ .. 30 சதவீத எண்ணிக்கையில் அரசு நிறுவனங்கள் செயல்பட அனுமதி..!!

Published: 6 Feb 2021, 1:22 PM |
Updated: 6 Feb 2021, 1:25 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து அமீரகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அபுதாபியில் சினிமாக்கள், மால்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கை திறனிலேயே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து தற்பொழுது அபுதாபி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் 30 சதவீத திறனிலேயே செயல்பட தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய நெறிமுறையானது நாளை (பிப்ரவரி 7) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி அரசு ஊடக அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “அபுதாபியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காகவும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அபுதாபி அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் 30 சதவீத அளவில் செயல்பட அரசு ஆதரவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதே போன்று, பணியிடத்திற்கு வெளியில் இருந்து முழுமையாக வழங்கக்கூடிய அனைத்து வேலைகளுக்கும் ‘Work from Home’ முறையை அறிவித்ததுடன், 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கும், நாள்பட்ட நோய்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை

ADVERTISEMENT

கொரோனாவிற்கான தடுப்பூசியினை இதுவரை எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள் அனைவரும் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை கொரோனாவிற்கான PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் தேசிய தடுப்பூசி திட்டங்களின் ஒரு பகுதியாக தடுப்பூசி போடப்பட்டு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கோல்டன் ஸ்டார் அல்லது E ஐகான்களை பெற்றவர்களுக்கு இந்த சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.