ADVERTISEMENT

UAE, சவூதியை தொடர்ந்து ஓமானிலும் அமலுக்கு வரவிருக்கும் VAT எனும் பொருட்களுக்கான வரி ..!!

Published: 14 Mar 2021, 2:11 PM |
Updated: 14 Mar 2021, 2:34 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் சமீபத்தில் பொருட்களுக்கு VAT எனும் வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது வளைகுடா நாடுகளில் மற்றுமொரு நாடான ஓமான் அரசும் பொருட்களுக்கு வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், ஓமானில் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் ஓமான் அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வரியானது ஆண்டுதோறும் சுமார் 400 மில்லியன் ஓமானி ரியால்களை திரட்டுவதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் சுமார் 1.5 சதவீதத்தை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரி தொடர்பான சட்டங்களை வழங்குதல், வரி தொடர்பான கணினி அமைப்பை இயக்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மின்னணு இணைப்பு உள்ளிட்ட vat அமலாக்கத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தேவைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன என்று வரி ஆணையத்தின் தலைவர் சவுத் பின் நாசர் அல் சுகைலி அவர்கள் இது குறித்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) சட்டத்திற்கான நிர்வாக விதிமுறைகளுக்கும் வரி ஆணையத்தின் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் முழுவதிலும் உள்ள விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விலக்கு அளித்து, பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓமான் அரசு சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டவை தவிர, ஓமானில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

VAT இலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலில் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, நிதி சேவைகள் மற்றும் சிறப்பு உணவுத் தேவைகள் உள்ளவர்களுக்கான அடிப்படை உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்கள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.