ADVERTISEMENT

ஓமானில் இன்று முதல் அமலுக்கு வரும் VAT..!! எரிபொருள் விலையில் 5% உயர்வு..!!

Published: 16 Apr 2021, 2:05 AM |
Updated: 16 Apr 2021, 3:10 AM |
Posted By: admin

ஓமானில் இன்று (ஏப்ரல் 16) முதல் மதிப்பு கூட்டப்பட்ட வரியானது (VAT) பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அமலுக்கு வருகின்றது.

ADVERTISEMENT

இந்த வரிக்கு ஓமான் வரி ஆணையம் நிர்வாக விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்து, அதன் செயல்பாட்டு பாதையை அமைத்துள்ளது. வரி கணினி அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மின்னணு இணைப்பு உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளும் தேவைகளும் இப்போது நடைமுறையில் உள்ளன.

இந்த நடவடிக்கையானது ஆண்டுதோறும் OMR400 மில்லியனை திரட்டுவதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே போல், மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) ஓமானில் எரிபொருள் விலையில் செயல்படுத்தப்படும் என்று வரி ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரி ஆணையத்தின் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருள் விலையில் மதிப்பு கூட்டப்பட்ட வரி பயன்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மதிப்பு கூட்டப்பட்ட வரியானது நாட்டின் எரிபொருள் விலைகளுக்கும் அடங்கும். ஏப்ரல் 2021 க்கான முந்தைய எரிபொருள் விலையை விட VAT செயல்படுத்துகையில், தற்பொழுது 5% அதிகரிப்பு செய்யப்படுகின்றது” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

தற்போதைய எரிபொருள் விலை:

M 95: லிட்டருக்கு 227 பைசா

M 91: லிட்டருக்கு 215 பைசா

டீசல்: லிட்டருக்கு 233 பைசா

VAT அமல்படுத்தப்படுவதற்கு முன்பு ஏப்ரல் 2021 க்கான எரிபொருள் விலைகள் :

M 95: லிட்டருக்கு 216 பைசா

M 91: லிட்டருக்கு 205 பைசா

டீசல்: லிட்டருக்கு 222 பைசா