ADVERTISEMENT

வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் என ஓமான் அரசு அறிவிப்பு..!!

Published: 12 May 2021, 4:15 PM |
Updated: 12 May 2021, 4:17 PM |
Posted By: admin

ஓமானில் மே 13, வியாழக்கிழமை (நாளை) ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் மற்றும் ஈத் அல்-பித்ரின் முதல் நாள் என்று ஓமானின் எண்டோமென்ட்ஸ் மற்றும் மத விவகார அமைச்சகம் (Ministry of Endowments and Religious Affairs) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, மே 13 ம் தேதி ஈத் அல் பித்ர் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஈத் விடுமுறையானது மே 15, சனிக்கிழமை வரை இருக்கும் என்றும் மே 16 முதல் பணிக்கு மீண்டும் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.