ADVERTISEMENT

Covid19: ஓமானில் முடிவுக்கு வரும் இயக்கத் தடை..!! உச்சக்குழு அறிவிப்பு..!!

Published: 14 May 2021, 4:56 PM |
Updated: 14 May 2021, 5:03 PM |
Posted By: admin

ஓமானில் உள்ள கொரோனாவிற்கான உச்சக் குழு, நாட்டில் கொரோனாவினைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை செயல்படுத்தவும் விதிமீறலில் ஈடுபடுபவர்களைத் தடுக்கவும் உதவிய ராயல் ஓமான் போலிஸ் (ROP) மற்றும் பப்ளிக் பிராசிக்யூஷன் போன்ற அனைத்து துறைகளை பாராட்டியதுடன், மே 15 முதல் அமலுக்கு வரும் முடிவுகளையும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மே 15 முதல் அமலுக்கு வருபவை:

  • தனிநபர்கள் மற்றும் வாகனங்களின் இயக்கம் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மே 15, நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை கடைகளுக்குள் வாடிக்கையாளர் சேவை புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெலிவரி மற்றும் டேக் அவே (take away) சேவைகள் அனுமதிக்கப்படும். மேலும் உணவகங்களுக்கு இதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வளாகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றுக்குள் வாடிக்கையாளர் சேவைகள் அனுமதிக்கப்படும் நேரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே (50 சதவீத திறன்) வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் கட்டுப்பாடானது தொடர்ந்து நீடிக்கும்.
  • நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று உச்சக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தொலைதூரத்தில் பணியாற்றுவதன் மூலம் வணிக தொடர்ச்சியான திட்டங்களை செயல்படுத்தவும், பணியிடத்திற்கு வர வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் தனியார் துறை நிறுவனங்களை அது வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.