ADVERTISEMENT

தடுப்பூசி போட்ட ஊழியர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு செல்ல அனுமதி..!! சவூதி அரசு அறிவிப்பு..!!

Published: 7 May 2021, 6:18 AM |
Updated: 7 May 2021, 6:18 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மட்டுமே அவர்கள் பணிபுரியும் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியாவின் மனித வள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அனைத்து ஊழியர்களும் தங்கள் பணியிடங்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வருகையை உறுதி செய்ய தடுப்பூசியைப் பெறுவதற்கான பதிவைத் தொடங்குமாறு அமைச்சகம் அனைத்து ஊழியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவானது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இது குறித்த செயல்முறை மற்றும் இந்த முடிவு அமலுக்கு வரும் தேதியை அமைச்சகம் விரைவில் தெளிவுபடுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.