ADVERTISEMENT

சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை ஒரு வருடத்திற்கும் மேலாக நீட்டித்து வரும் இந்தியா..!! மேலும் ஒரு மாதம் தடை நீடிக்கும் என அறிவிப்பு..!!

Published: 30 Jun 2021, 8:40 AM |
Updated: 30 Jun 2021, 10:53 AM |
Posted By: admin

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது வரை துவங்கப்படவில்லை. இந்நிலையில், சர்வதேச விமான சேவைக்கான தடையினை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த இடைநிறுத்தமானது தற்போது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தடையானது சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கும், அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு குறிப்பிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைக்கும் பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த மே மாதத்தில், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துத் தடையை  இந்தியா ஜூன் 30 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT