ஓமானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், நோய்த்தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்கள் பூர்த்தி செய்யாவிட்டால், ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுக்க அறிவுறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சகம் (MoH) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்கள் முடிந்த பின்னர், இரண்டாவது டோஸினை எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் தாண்டினால் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நோய்த்தொற்று ஏற்பட்ட ஆறு மாதங்களை நிறைவு செய்வதற்கு முன்னர் யாராவது பயணம் செய்ய விரும்பினால், பயண இலக்கின் கோரிக்கைக்கான சான்றினை சமர்ப்பித்து தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்ளலாம் எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.