ADVERTISEMENT

ஈத் அல் அத்ஹா 2021: ஓமானில் 9 நாட்கள் விடுமுறையைப் பெறும் ஊழியர்கள்..!!

Published: 12 Jul 2021, 1:44 AM |
Updated: 12 Jul 2021, 3:16 AM |
Posted By: admin

ஓமானில் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் உத்தரவின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த அறிவிப்பின் கீழ், அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும் ஈத் அல் அத்ஹா விடுமுறை ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை முதல் (துல் ஹஜ் 8) தொடங்கி ஜூலை 22, வியாழக்கிழமை (துல் ஹஜ் 12) வரை 5 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் விடுமுறைக்கு முன்னரும் பின்னரும் வார இறுதி நாட்கள் என்பதால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறையை ஊழியர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும், ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை முதல் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.