ADVERTISEMENT

சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை நீட்டித்த இந்தியா..!! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்..!!

Published: 30 Jul 2021, 1:15 PM |
Updated: 30 Jul 2021, 1:19 PM |
Posted By: admin

இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது மற்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படும் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கும் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து மார்ச் 23, 2020 முதல் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் தடை செய்யப்பட்டன.

ADVERTISEMENT

மேலும் இந்த விமானத் தடை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

இருப்பினும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 28 நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் காரணமாக அந்நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலைப் பரவலினால் ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்ட அமீரகம், ஓமான், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.