ADVERTISEMENT

இந்தியா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணத்திற்கு முந்தைய PCR டெஸ்ட் எடுக்க தேவையில்லை..!! ஏர் இந்தியா வெளியிட்ட மாநிலங்கள் எவை..!!

Published: 21 Jul 2021, 7:48 AM |
Updated: 21 Jul 2021, 8:17 AM |
Posted By: admin

இந்தியாவின் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு பயணிக்கும் பயணிகளில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட பயணிகள் இந்தியாவிற்கு செல்லும்போது தற்போது எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை முன்வைக்க தேவையில்லை என்று இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவின் மேற்கு வங்கம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணிக்கும் பயணிகள் கொரோனாவிற்கான தடுப்பூசியின் இரண்டு டோசையும் போட்டுக்கொண்டவர்களாக இருப்பின் அவர்கள் பயணத்திற்கு முந்தைய PCR டெஸ்ட் எடுக்க தேவையில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனினும் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ் பெற்றதற்கான ஆதாரமாக தடுப்பூசி சான்றிதழை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்தியாவின் தேசிய விமான நிறுவனம் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்தியாவின் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள் தங்கள் பயண தேதிக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏர் இந்தியா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பில், இந்த புதிய விலக்கானது இந்த மாநிலங்களுக்கு உள்நாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கா இல்லை வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கா இல்லை இரண்டுக்கும் பொருந்துமா என்பது பற்றி தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் எனில், தமிழ் நாடு அரசும் இதனை செயல்படுத்தினால் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரும்பாலான தமிழர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT