ADVERTISEMENT

ஈத் அல் அத்ஹா: முழு நேர லாக்டவுனை நீட்டித்த ஓமான்…!!

Published: 18 Jul 2021, 2:23 PM |
Updated: 18 Jul 2021, 4:43 PM |
Posted By: admin

ஓமானில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அதனைப் பொருட்டு இம்மாத இறுதி வரையிலும் மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை வணிக நடவடிக்கைகள் மற்றும் தனிநபர் இயக்கத்திற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் ஈத் அல் அத்ஹாவின் முதல் மூன்று நாட்களுக்கு (துல் ஹஜ் 10 முதல் 12 வரை) முழு நேர இயக்கத்தடையை அறிவித்திருந்தது.

ஈத் அல் அத்ஹா செவ்வாய்ககிழமை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முழு நேர லாக்டவுன் வியாழக்கிழமை முடியும் என எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இதனை ஜூலை 24, சனிக்கிழமை வரை நீட்டிப்பதாக ஓமானின் கொரோனாவிற்கான உச்சக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

உச்சக் குழு பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஜூலை 24 சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த இயக்கத்தடை நடைமுறையில் இருக்கும்.

இந்த காலகட்டத்தில், வீடுகளை விட்டு வெளியே மக்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT