ADVERTISEMENT

இந்த வருட ஈத் அல் அத்ஹாவிற்கான தேதியை உறுதி செய்து அறிவித்த சவூதி அரேபியா..!!

Published: 10 Jul 2021, 12:30 AM |
Updated: 10 Jul 2021, 4:44 AM |
Posted By: admin

ஈத் அல் அத்ஹா எப்போது என உறுதிப்படுத்தும் துல் ஹஜ் மாதத்திற்கான பிறை வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவில் காணப்படவில்லை என்று சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஜூலை 11 ம் தேதி ஆரம்பிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஈத் அல் அத்ஹாவானது கடைசி மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே இந்த வருடத்திற்கான அரஃபா நாள் இந்த ஆண்டு ஜூலை 19 அன்று வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈத் அல் அத்ஹா ஜூலை 20 ம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகத்திலும் ஜூலை 20 அன்றே ஈத் அல் அத்ஹா கொண்டாடப்படும். இது குறித்த அறிவிப்பை அமீரக அரசும் வெளியிடும் என எதிர்பார்ககப்படுகிறது.

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஆறு நாள் நீண்ட இடைவெளி கிடைக்கவுள்ளன. முன்னதாக, துபாய் அரசாங்கத்தின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறைகள் ஜூலை 19 திங்கள் அன்று அரஃபா தினம் என்ற கணிப்பை வெளியிட்டிருந்தது. ஆகவே, ஜூலை 20 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அத்ஹாவின் முதல் நாளாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த கணிப்புகளின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஜூலை 19 திங்கள் முதல் ஜூலை 22 வியாழன் வரை நான்கு நாள் ஈத் விடுமுறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார விடுமுறையினையும் சேர்த்து இந்த மாதத்தில் ஆறு நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.