ADVERTISEMENT

பொது போக்குவரத்தைப் பயன்படுத்த தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி..!! சவூதி அரசு அறிவிப்பு..!!

Published: 26 Jul 2021, 5:42 PM |
Updated: 26 Jul 2021, 5:47 PM |
Posted By: admin

பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகள், கல்வி மையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடங்களுக்குள் நுழையும் சவுதி குடியிருப்பாளர்கள் இனி தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 1 முதல், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பின்வருவனவற்றிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை

பொருளாதார, வணிக, கலாச்சார, பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகள்

ADVERTISEMENT

கலாச்சார, கல்வி, சமூக அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகள்

அரசு அல்லது தனியார் நிறுவனங்கள், பணியாளர் மற்றும் பார்வையாளர் 

ADVERTISEMENT

அரசு அல்லது தனியார் கல்வி மையங்கள்

பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள்

மேற்குறிப்பிட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து குடியிருப்பாளர்களும் தங்களது தடுப்பூசி நிலையை தவக்கல்னா அப்ளிகேஷனில் காண்பிக்க வேண்டும். அத்துடன் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.