ADVERTISEMENT

இந்தியா- ஓமான் பயணத்தடை நீக்கம்: சமீபத்திய நடைமுறைகளை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!

Published: 25 Aug 2021, 10:55 AM |
Updated: 25 Aug 2021, 11:02 AM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து ஓமான் பயணிக்க கடந்த சில மாதங்களாக பயணத்தடை அமலில் இருந்த நிலையில், ஓமான் குடியிருப்பாளர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 1 முதல் நாட்டிற்கு பயணிக்கலாம் என்று இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஓமானுக்குப் பயணிக்கும் இந்தியப் பயணிகள் பின்பற்ற வேண்டிய பயண நடைமுறைகள் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

பயண நடைமுறைகள்

பயணிகள் ஓமான் அரசு அங்கீகரித்துள்ள கொரோனாவிற்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டு அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

இரண்டாவது டோஸ் ஓமான் வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்

ஓமான் வருவதற்கு பயணிகள் இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட PCR சோதனை முடிவை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தடுப்பூசி சான்றிதழ் மற்றும் PCR சோதனை முடிவு இரண்டுமே QR குறியீட்டை கொண்டிருக்க வேண்டும்.

எதிர்மறையான PCR சோதனை முடிவு இல்லாமல் வருபவர்கள் ஓமான் வந்திறங்கியவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும், இதற்கான எதிர்மறை முடிவு வரும் வரை மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிந்து கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

பயணிகள் அனைவரும் Tarassud+ அப்ளிகேஷனில் பதிவு செய்து தடுப்பூசி சான்றிதழ் மற்றும் PCR முடிவை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்

18 வயதுக்குக் கீழ் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் PCR சோதனை தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.