ADVERTISEMENT

பயணத்தடையை நீக்கி வரும் வளைகுடா நாடுகள்..!! ஓமானிலும் விரைவில் தடை நீக்கப்படும் என குடியிருப்பாளர்கள் எதிர்பார்ப்பு..!!

Published: 4 Aug 2021, 11:08 AM |
Updated: 4 Aug 2021, 12:06 PM |
Posted By: admin

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பயணத்தடை விதித்த வளைகுடா நாடுகள் தற்பொழுது பயணத்தடையை நீக்கி வருவதால் ஓமான் நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பயணத் தடையும் விரைவில் நீக்கப்படும் என்று ஓமான் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

ADVERTISEMENT

மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் ஆகிய நாடுகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வரலாம் என அறிவித்துள்ளனர்.

கத்தார் நாட்டில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அல்லது கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பயணிகள், இரண்டு நாட்களுக்கு ஒரு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், மேலும் எதிர்மறை PCR சோதனை முடிவைப் பெற்ற பிறகு அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் என்று கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

“இந்த நாடுகளில் இருந்து வரும் மற்ற அனைத்து பயணிகளும் 10 நாட்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 5 முதல், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என அமீரக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், ஆகஸ்ட் 1 ஆம் தேதி குவைத், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களின் முதல் குழுவை வரவேற்றது என்று நாட்டின் செய்தி நிறுவனம் KUNA தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், “ஃபைசர், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா மற்றும் மாடர்னா, அல்லது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது, மேலும் சுகாதார அதிகாரிகளின் நடைமுறைகளை அவர்கள் கடைபிடிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளது. 

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஓமானிலும் விரைவில் பயணத்தடை நீக்கப்படும் என நம்புவதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, எத்தியோப்பியா, தான்சானியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஓமானிற்கு நேரடி விமான சேவைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. சில பயணிகள் ஓமானுக்கு மாற்று வழிகளை நாடி, வேறொரு நாட்டிற்கு பயணித்து அங்கிருந்து ஓமான் வருகின்றனர்.

இந்த பயண ஏற்பாடுகளுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் கூடுதல் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் காரணமாக, குறைவான நபர்களே இதனை தேர்வு செய்வதாக கூறப்பட்டுள்ளது.

“சமீபத்திய ஈத் அல் அத்ஹா விடுமுறைக்கு முன்பே நிறைய பயணிகள் இந்த மாற்றுவழியைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று டிராவல் பாயின்ட்டின் பொது மேலாளர் ஃபயாஸ் கான் கூறினார்.

இருப்பினும், அதன் பின்னர் முன்பதிவுகள் மற்றும் இது குறித்த விளக்கங்கள் குறைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லை என்பதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

கத்தார் வழியாக ஓமான் திரும்பி வர விமான டிக்கெட்டுகளைத் தவிர்த்து OMR500 செலவாகும்.

இதனால் பலரும் நேரடி விமான சேவைகள் மீண்டும் திறக்க காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.