ADVERTISEMENT

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் இந்தியாவில் இருந்து ஓமான் வரலாமா..?? ஓமான் அங்கீகரித்துள்ள தடுப்பூசிகள் என்னென்ன..??

Published: 27 Aug 2021, 10:09 AM |
Updated: 27 Aug 2021, 10:10 AM |
Posted By: admin

ஓமானில் வரும் செப்டம்பர் 1 முதல் இந்தியா உட்பட குறிப்பிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டு பயணிகள் ஓமான் வரலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மேலும் ஓமான் வரும் பயணிகள் ஓமான் அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிக்கான முழு டோஸினையும் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்பொழுது ஓமான் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியல்

பைசர்-பயோஎன்டெக்

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா

ADVERTISEMENT

அஸ்ட்ராஜெனெகா- Covishield

ஜான்சன் & ஜான்சன்

சினோவாக்

மாடர்னா

ஸ்புட்னிக் V.

சினோபார்ம்

இதன் மூலம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் போட்டுக்கொண்டவர்கள் ஓமான் அறிவித்துள்ள பயண நடைமுறைகளை முறையாகப் பின்பற்றினால் எவ்வித சிரமமும் இல்லாமல் ஓமான் வரலாம்என்பது தெளிவாகியுள்ளது.