ADVERTISEMENT

வெறும் 650 திர்ஹம்ஸ் செலுத்தினால் போதும்.. எத்தனை முறை வேணாலும் அமீரகம் வரலாம்.. எப்படி விண்ணப்பிப்பது..??

Published: 30 Sep 2021, 10:55 AM |
Updated: 30 Sep 2021, 11:14 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, வெளிநாட்டினர்கள் அமீரகத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் ஐந்து வருடத்திற்கான புதிய மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாவுக்கு (Multiple Entry Tourist Visa) விண்ணப்பிக்க வெறும் 650 திர்ஹம்ஸ் மட்டுமே கட்டணமாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரக அரசின் இந்த புதிய ஐந்து வருட விசாவின் கீழ் அமீரகம் வரும் வெளிநாட்டினர் ஒருவர் ஒரு வருடத்தில் 90 நாட்கள் அமீரகத்தில் தங்கியிருக்க முடியும். மேலும் அவர்கள் தொடர்ந்து தங்க விரும்பினால் அடுத்த 90 நாட்களுக்கு நீட்டித்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது..??

இந்த புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ICA இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர் தனது வங்கி அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை நேரடியாக ICA இணையதளத்தில் பதிவேற்றவும் முடியும். இருப்பினும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு விசா வழங்குவது ICA அதிகாரத்தின் விருப்பத்தை பொறுத்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT

அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா, அல் அய்ன் மற்றும் அல் தாஃப்ரா (Western Region) ஆகிய இடங்களில் இருந்து மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.ica.gov.ae என்ற ICA இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். துபாய் அரசால் வழங்கப்படும் மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாக்கள் GDRFA இணையதளத்தின் மூலமே விண்ணப்பிக்க முடியும்.

ICA இணையதளத்தில் ஐந்து ஆண்டு விசாவிற்கு விண்ணப்பிக்க படிப்படியான செயல்முறை..

>> படி 1

ADVERTISEMENT

விண்ணப்பதாரரின் பெயர், விவரங்கள், அமீரக இருப்பிடத்தின் முகவரி, சொந்த நாட்டின் முகவரி உள்ளிட்ட விண்ணப்பத் தகவலைப் பதிவேற்றவும்.

>> படி 2

விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம், பாஸ்போர்ட் நகல், மருத்துவ காப்பீடு மற்றும் கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை உள்ளிட்ட இணைப்புகளை பதிவேற்றவும். (விண்ணப்பதாரர்கள் கடந்த ஆறு மாதங்களில் $ 4,000 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்களில் தங்களின் வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும்)

>> படி 3

விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் மதிப்பாய்வு செய்யவும்

>> படி 4

ஐந்து வருடத்திற்கான மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்

>> படி 5

இறுதியாக ஈமெயில் மூலம் விசா விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அமீரக அரசு அறிவித்துள்ள இந்த ஐந்து வருட மல்டிபிள் என்ட்ரி சுற்றுலா விசா அனைத்து நாட்டினர்களுக்கும் கிடைக்கும் என்று ICA ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த புதிய விசாவானது கடந்த மார்ச் 21, 2021 அன்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் இந்த விசாவினை பெற்று அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகள், தாங்கள் அமீரத்திற்குள் நுழைந்த முதல் நாளிலிருந்தே வருடத்திற்கான நாட்கள் தொடங்கும் என்றும், ஒரு வருடத்தில் 90 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால், தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க ஒரு கோரிக்கையை சமர்பிப்பதன் மூலம் 180 நாட்களுக்கு மிகாமல் நாட்டில் தங்கலாம் என்றும் ICA தெரிவித்துள்ளது.

விசாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்ந்த ஸ்பான்சர் தேவையா..?

விசா அறிவிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட விவரங்களின்படி, இந்த விசா வழங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த தனிநபர் அல்லது வேறு ஏதேனும் ஸ்பான்சர் தேவையில்லை. சுற்றுலா பயணிகள் தங்களின் சுய-ஸ்பான்சர்ஷிப்பில் இந்த நீண்ட கால டூரிஸ்ட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

 

ICA வில் விண்ணப்பிக்க: www.ica.gov.ae

GDRFA வில் விண்ணப்பிக்க: www.gdrfad.gov.ae