ஓமானில் அக்டோபர் 12, 2021 செவ்வாய்க்கிழமை முதல் வெளிநாட்டவர்கள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓமான் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
“இந்த தடுப்பூசியின் முதல் டோஸை (ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா), அக்டோபர் 12, 2021 செவ்வாய்க்கிழமை முதல், Tarassud+ இல் முன் பதிவு செய்வதன் மூலம் அல்லது Covid19.moh.gov.om என்ற இணைப்பு மூலம் அப்பாய்மெண்ட் பெறும் வெளிநாட்டவர்களுக்கு, சுகாதார அமைச்சகம் தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடுகிறோம்” என சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.