ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை மையம் தகவல்..!!

Published: 23 Oct 2021, 2:57 AM |
Updated: 23 Oct 2021, 2:59 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் இருக்கும் அல் ஃபயா பகுதியில் 2.4 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு பதிவாகியுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலநடுக்க நடவடிக்கைகளை கண்காணிக்கும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) நில அதிர்வு துறை இதனை அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இப்பகுதியில் சிறிது உணரப்பட்டதாகவும், ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் NCM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் அக்டோபர் 14 அன்று, ஃபுஜைராவில் உள்ள டிப்பா பகுதியில் 1.9 என்ற லேசான ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்திருந்தது.

அமீரகத்தில் அவ்வப்போது ஏற்படும் லேசான நிலதிர்வானது இப்பகுதியில் உள்ள நிலத்தட்டுகள் நகர்வதால் ஏற்படுவதாகவும் இதனால் பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT