ADVERTISEMENT

ஓமான்: தேசிய தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்பட உள்ள வான வேடிக்கைகள்..!!

Published: 18 Nov 2021, 9:12 AM |
Updated: 18 Nov 2021, 9:15 AM |
Posted By: admin

ஓமானில் 51வது தேசிய தின கொண்டாட்டத்திற்கான வான வேடிக்கைகள், ராணுவ அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நவம்பர் 18, 2021 வியாழன் முதல் தொடங்கப்படும் என்று தேசிய கொண்டாட்டங்களின் பொதுச் செயலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து “கொரோனா வைரஸிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க, 51 வது புகழ்பெற்ற தேசிய தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை முடித்ததாக தேசிய கொண்டாட்டங்களின் தலைமைச் செயலகம் அறிவிக்கிறது” என்று ஓமன் செய்தி நிறுவனம் (ONA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மஸ்கட் கவர்னரேட்டில் அல் அமெராத் மற்றும் சீப் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தோஃபார் கவர்னரேட்டிலும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அல் முஸ்தபா முகாம் மைதானத்தில் இராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளதால், அல் பராக்கா அரண்மனை ரவுண்டானாவில் இருந்து அல் முஸ்தபா முகாமில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானம் வரை சாலை ஓரத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என ராயல் ஓமன் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அணிவகுப்பில் ஓமன் ராயல் ஆர்மி, ஓமன் ராயல் ஏர் ஃபோர்ஸ், ஓமன் ராயல் நேவி, நாட்டின் சிறப்புப் படை, ராயல் ஓமன் போலீஸ், ராயல் கேவல்ரி போன்ற பல்வேறு பிரிவுகள் பங்கேற்கின்றன. இந்த விழாவில் கூட்டு ராணுவ இசைக் குழுவும் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.