ADVERTISEMENT

UAE: பார்வையாளர்கள் எக்ஸ்போவிற்கு இலவசமாக நுழைய அனுமதி..!! எப்போது தெரியுமா..??

Published: 30 Nov 2021, 4:36 PM |
Updated: 15 Jan 2022, 10:21 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு உலகின் மாபெரும் நிகழ்வான எக்ஸ்போவிற்கு, பார்வையாளர்கள் இலவசமாக நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகளாவிய கண்காட்சியான எக்ஸ்போ-2020 துபாய், இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கியதில் இருந்து பல்வேறு சிறப்பு பாஸ்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சமீபத்திய அறிவிப்பில், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் டிசம்பர் 2 அன்று எக்ஸ்போவிற்கு இலவசமாக நுழையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நவம்பர் 28 வரையிலான கணக்கெடுப்பின் படி, எக்ஸ்போவிற்கு கிட்டத்தட்ட 4.8 மில்லியன் வருகை பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT