ADVERTISEMENT

ஓமான்: வெளிநாட்டவருக்கு தடுப்பூசி செலுத்த மஸ்கட்டின் இந்த சென்டர்களில் வசதி..!!

Published: 30 Nov 2021, 2:10 PM |
Updated: 30 Nov 2021, 2:51 PM |
Posted By: admin

ஓமானில் வெளிநாட்டினருக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மொபைல் குழுக்கள் மஸ்கட் கவர்னரேட்டின் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது பற்றி ஒரு அறிக்கையில், “மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம், கொரோனாவிற்கு எதிரான நோய்த்தடுப்பு சேவைக்கான மொபைல் குழுக்கள் இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இங்கு வசிப்பவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ்கள் நவம்பர் 30, செவ்வாய் மற்றும் டிசம்பர் 1, புதன்கிழமையில், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பின்வரும் இடங்களில் தடுப்பூசிகள் சேவை கிடைக்கும்” என கூறப்பட்டுள்ளது.

அவை:

ADVERTISEMENT

அல் சாஹில் சுகாதார மையம் (குராயத்)

அல் அமேரத் சூக் 

ADVERTISEMENT

அல் மாபிலா இண்டஸ்ட்ரியல் (சீப் சூக்)

முத்ரா சூக் மற்றும் ஹம்ரியா

மருத்துவ உடற்பயிற்சி மையம் (அல் ஷரதி / சீப் விலாயத்)