ஓமானில் வரவிருக்கும் 51வது தேசிய தினத்தை முன்னிட்டு ஓமானின் மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் அரச உத்தரவுப்படி, வரும் நவம்பர் 28 (ஞாயிறு) மற்றும் 29 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்களுக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இரு நாட்களும் ஊழியர்களுக்கு விடுமுறை எனவும் தனியார் துறை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை நேரத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டால், மேற்கூறிய இரண்டு நாட்களில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அந்தந்த ஊழியர்களுடன் உடன்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.