ADVERTISEMENT

UAE: 40 நிமிட வான வேடிக்கையுடன் மூன்று உலக சாதனைகளை படைக்க காத்திருக்கும் அபுதாபி… எங்கே தெரியுமா…??

Published: 23 Dec 2021, 7:43 AM |
Updated: 15 Jan 2022, 10:27 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வரவிருக்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாட காத்திருக்கின்றது. அமீரக தலைநகரான அபுதாபியிலும் புத்தாண்டை மிகவும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள அல் வத்பாவில் நடைபெறும் ஷேக் சையத் ஃபெஸ்டிவலானது 2022 ஐ வரவேற்கும் வகையில் 40 நிமிட வான வேடிக்கையுடன் மூன்று கின்னஸ் உலக சாதனைகளை படைக்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விழாவின் உயர் ஏற்பாட்டுக் குழு புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அல் வத்பாவில் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வானவேடிக்கைகளின் அளவு, காலம் மற்றும் வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் இது உலக சாதனைகளை முறியடித்து மூன்று புதிய சாதனைகளை படைக்கும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 35 நிமிட வானவேடிக்கைகளுடன் இந்த ஷேக் சையத் ஃபெஸ்டிவல் இரண்டு சாதனைகளை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும், இங்கு ட்ரோன் நிகழ்ச்சி முதன்முறையாக வானத்தில் ‘welcome 2022’ என்று காண்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ட்ரோன் ஷோவில் இதுபோன்ற அம்சம் உலகிலேயே இதுதான் முதன்முதலாக இருக்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவை தவிர, புத்தாண்டில் அனைத்து வயதினரும் மகிழ்வதற்காக பல்வேறு நிகழ்வுகள், நடனங்கள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2022 வரை நடைபெறும் இந்த விழா, ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றது. மேலும் இப்பகுதியை ஒரு முன்னணி சுற்றுலா மற்றும் கலாச்சார தலமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.