ADVERTISEMENT

அடுத்த ஆண்டு முதல் VAT-ஐ 5 லிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தும் வளைகுடா நாடு…!!

Published: 9 Dec 2021, 11:28 AM |
Updated: 9 Dec 2021, 1:57 PM |
Posted By: admin

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அளிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரியை (VAT) 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவீதமாக இரட்டிப்பாக மாற்றுவதற்கு பஹ்ரைனின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நிதி மற்றும் பொருளாதார விவகாரக் குழுவின் தலைவருமான அகமது அல் சல்லூம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கையானது நாட்டின் நிதி இருப்பு திட்டத்தின் முக்கிய தூண் என்று பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக எதிர்பார்க்கப்படும் VAT அதிகரிப்பானது, அடுத்த சில ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3 சதவீத வரவுகளை பங்களிக்கும் என்றும் இது இந்த ஆண்டு சுமார் 1.7 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யும் நிறுவனமான S&P Global Ratings மதிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து பஹ்ரைன் நிதி அமைச்சகம், “பாராளுமன்றம் VAT அதிகரிப்புக்கு வெற்றிகரமாக ஒப்புதல் அளித்திருப்பது நமது பொருளாதார மீட்புத் திட்டங்களில் ஒரு முக்கியமான மைல்கல் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் சமநிலையான பட்ஜெட்டை அடைவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளது.