ADVERTISEMENT

இந்தியாவிலும் பரவிய ஒமிக்ரான் வைரஸ்..!! இருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

Published: 2 Dec 2021, 1:31 PM |
Updated: 2 Dec 2021, 1:46 PM |
Posted By: admin

கொரோனா வைரஸில் மாறுபாடு கொண்ட புதிய ஒமிக்ரான் வைரஸானது உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது. தற்பொழுது இந்தியாவிலும் முதன் முறையாக இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நவம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் மீண்டும் பயணத்தடையை அறிவித்து வருகின்றன. இந்தியாவும் வரும் டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்கப்படவிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை இதன் காரணமாக ஒத்தி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.