ADVERTISEMENT

இந்தியாவில் பரவும் ஒமிக்ரான்.. இதுவரை 101 பேருக்கு தொற்று உறுதி…

Published: 17 Dec 2021, 1:43 PM |
Updated: 17 Dec 2021, 1:46 PM |
Posted By: admin

கொரோனாவில் மாறுபாடு கொண்ட புதிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கிடையில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸால் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பாதிப்புகள் 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில் மகாராஷ்டிராவில் 32 பேர், டெல்லி 22 பேர் , ராஜஸ்தான் 17 பேர், கர்நாடகா 8 பேர், தெலுங்கானா 8 பேர், குஜராத் 5 பேர், கேரளா 5 பேர், ஆந்திரா பிரதேஷ் 1 நபர், சண்டிகர் 1 நபர், தமிழ்நாடு 1 நபர் மற்றும் மேற்கு வங்கம் 1 நபர் என அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதால், மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.