ADVERTISEMENT

குவைத்திற்கும் பரவிய ஓமிக்ரான் வைரஸ்… நோய்த்தொற்றை உறுதி செய்த சுகாதார அமைச்சகம்..!!

Published: 9 Dec 2021, 4:08 AM |
Updated: 9 Dec 2021, 4:09 AM |
Posted By: admin

கொரோனாவின் புதிய வகை மாறுபாடுடைய ஓமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், தற்பொழுது குவைத்திலும் முதன் முறையாக ஒரு நபருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாட்டிலிருந்து குவைத்திற்கு வந்த ஐரோப்பிய பயணி ஒருவரில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது என்று குவைத் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக மற்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT