ADVERTISEMENT

அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. சவூதியில் முதல் தொற்று உறுதி.. தகவலை பகிர்ந்த அரசு செய்தி நிறுவனம்..!!

Published: 1 Dec 2021, 9:55 AM |
Updated: 1 Dec 2021, 10:07 AM |
Posted By: admin

கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்பொழுது கொரோனாவில் புதிய மாறுபாடுடைய வைரஸான ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

ADVERTISEMENT

இதனை முன்னிட்டு பல நாடுகள் மீண்டும் பயணத்தடைகளை அறிவித்து வருகின்றன. சவூதி அரேபியாவில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் நேரடியாக வருவதற்கு அனுமதி அளித்த சிறிது காலத்திலேயே ஓமைக்ரான் அச்சுறுத்தலால் சில குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை சவூதி அறிவித்துள்ளது.

இந்த நிலை தற்போது நீடித்து வரும் நிலையில் வட ஆபிரிக்க நாட்டிலிருந்து வந்த பயணி ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது என்று அரசு செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த பயணியே சவூதி அரேபியாவில் முதல் ஓமைக்ரான் தொற்று பாதித்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதிகாரிகள் அந்த நபரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் சவூதி அமைச்சகம் மக்கள் தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொள்ளவும் பயணிகள் சுய-தனிமை மற்றும் சோதனை விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஓமைக்ரான் பரவலால் இஸ்ரேல், மொராக்கோ மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முழுமையாக தங்கள் எல்லைகளை மூடி பயணத்தடையை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.