ADVERTISEMENT

துபாய்: ‘Right of Way’-ல் பார்க்கிங் செய்ய தடை… துபாய் இளவரசர் வெளியிட்ட புதிய தீர்மானம்.. மீறினால் வாகனங்கள் பறிமுதல்..!!

Published: 6 Dec 2021, 4:10 AM |
Updated: 15 Jan 2022, 10:18 PM |
Posted By: admin

துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ‘right of way’ பகுயில் பார்க்கிங்கை ஒழுங்குபடுத்தும் புதியதொரு தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் வெளியிடப்பட்ட புதிய தீர்மானத்தின்படி ‘right of way’ பகுதியில் சாலை பயனர்களுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளர்கள் கூடுதல் நிர்வாகக் கட்டணமாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“Right of way” என்பது குறிப்பிட்ட நபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது அரசிற்கோ பாத்தியப்பட்ட பிரத்யேக வழி அல்லது பாதையாகும். அப்பகுதியை பயன்படுத்த அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. மற்றவர்கள் பயன்படுத்த விரும்பினால் அதற்கான அனுமதியை பெற வேண்டும்.

ADVERTISEMENT

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தீர்மானத்தின்படி, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சி, right of way மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அனுமதி பெறாமல் சாலைக்கு அருகில் இருக்கும் நடைபாதையை (pavement) பயன்படுத்த அனுமதி இல்லை. 24 மணி நேரத்திற்குள் ஏஜென்சிக்கு அறிவித்தால், அரசு நிறுவனங்கள், அவசரகால நிகழ்வுகளுக்கு நடைபாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

ADVERTISEMENT

நடைபாதையின் எந்தப் பகுதிகளை பார்க்கிங் செய்ய பயன்படுத்தலாம் என்பதை RTA இன் டைரக்டர் ஜெனரல் தீர்மானிப்பார் என்றும் இந்த தீர்மானம் குறிப்பிடுகிறது. இப்பகுதிகள் பாதசாரி போக்குவரத்திற்கு இடையூறாகவோ அல்லது பொது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.

RTA இன் டைரக்டர் ஜெனரல் இப்பகுதியை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறுவதற்கான தேவைகள் குறித்தும் முடிவு செய்வார், இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் அதே காலத்திற்கு புதுப்பிக்கத்தக்கதாக இருக்கும். தேவைப்படும் போது ஒரு வருடத்திற்கும் குறைவான செல்லுபடியாகும் காலத்துடன் அனுமதி வழங்கப்படலாம். இதற்கான அனுமதிக் கட்டணம் 1,000 திர்ஹங்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அனுமதி அல்லது தடையில்லா கடிதத்தைப் (No Objection Certificate) பெறுவதற்கு முன், right of way மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. அவசர காலங்களில், அரசு நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் ஏஜென்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

அங்கு மேற்கொள்ளப்படும் எந்த வேலையும் விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் (specification) மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

Right of way-யை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த RTA இன் முன் அனுமதி தேவை. RTA மற்றும் சாலையைப் பயன்படுத்தும் நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி இது விதிமுறைகளுக்கு உட்பட்டது.

ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் துபாயில் உள்ள நிதித் துறையுடன் (Department of Finance) ஒருங்கிணைந்து RTA இன் இயக்குநர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அத்துடன் இந்த புதிய தீர்மானத்தின்படி, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் ப்ளாக் பாய்ண்ட்ஸை நிர்வகிப்பதற்கான விவரங்களைத் தீர்மானிக்கும் ‘பிளாக் லிஸ்ட்’ பதிவேட்டை ஏஜென்சி உருவாக்கும்.

RTA-வின் போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சி அனுமதிகள் மற்றும் NOC-யினை ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம். துபாயின் நிதித் துறையுடன் ஒருங்கிணைந்து, ரத்து செய்தல் அல்லது மாற்றியமைக்கப்பட்டால், அனுமதி அல்லது NOC செலுத்தப்பட்ட கட்டணத்தின் ஒரு பகுதியைத் திரும்பப்பெற ஏஜென்சி பொறுப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான முடிவுக்கு எதிராக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருந்தால், அது வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.