ADVERTISEMENT

UAE: களைகட்ட உள்ள துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்.. வாடிக்கையாளர்கள் 1 மில்லியன் திர்ஹம் அளவிலான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு..!!

Published: 14 Dec 2021, 4:32 PM |
Updated: 15 Jan 2022, 10:15 PM |
Posted By: admin

ஒவ்வொரு வருடமும் துபாயில் நடைபெறும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலானது இந்த வருடம் தனது 27வது பதிப்பினை டிசம்பர் 15, 2021 முதல் ஜனவரி 30, 2022 வரை நடத்தும் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனையொட்டி துபாய் ஷாப்பிங் மால்ஸ் குரூப் (DSMG) செவ்வாயன்று துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (DSF) போது பொருட்கள் வாங்குபவர்களுக்கு 1 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான பரிசுகளை வெல்லும் வாய்ப்பினை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த வருட DSF-ல் 17க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் ப்ரொமோஷனில் பங்கேற்கும் என கூறப்பட்டுள்ளது. ஷாப்பிங் செய்பவர்கள் DSF ல் பங்கேற்கும் மால்களில் இருக்கும் எந்தவொரு கடையிலிருந்தும் குறைந்த பட்சம் 100 திர்ஹம் வரை செலவு செய்தால், தங்களுடைய செலவின அடிப்படையில் சிவப்பு, மஞ்சள் அல்லது நீல நிறச் சக்கரத்தைச் சுழற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்று பரிசுகளை வெல்லலாம்.

ADVERTISEMENT

100 திர்ஹம் செலவழிக்கும் நபர்கள் 200,000 திர்ஹம் வரை வெல்லும் வாய்ப்பையும், அதேசமயம் 250 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவு செய்பவர்கள் 300,000 திர்ஹம் வரை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள். 350 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவழிப்பவர்கள் அனைவரும் 500,000 திர்ஹம்களை வெல்வதற்கான ரேஃபிளில் நுழையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு துபாய் ஷாப்பிங் மால்ஸ் குரூப் டிஎஸ்எஃப் ப்ரொமோஷனில் பங்கேற்கும் மால்கள் அல் பர்ஷா மால், அல் பஸ்தான் சென்டர், அல் குரைர் சென்டர், அல் கைல் கேட் சோஷியல் சென்டர், அல் வர்கா சிட்டி மால், அரேபியன் சென்டர், பே அவென்யூ, பின் சௌகத் சென்டர், புர்ஜுமன் சென்டர், பர்ஷா சவுத் மால், எதிஹாட் மால், கராமா சென்டர், ஒயாசிஸ் மால், ரீஃப் மால், ரெம்ராம் சோஷியல் சென்டர், ஷூரூக் சோஷியல் சென்டர் மற்றும் டைம் ஸ்கொயர் சென்டர் ஆகியவை ஆகும்.

ADVERTISEMENT