ADVERTISEMENT

எக்ஸ்போ-2020 துபாய்: யோகாசனத்தில் உலக சாதனை படைக்கவுள்ள தமிழ் பெண்..!!

Published: 12 Dec 2021, 7:12 AM |
Updated: 12 Dec 2021, 9:11 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020 துபாயில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் உலக சாதனை படைக்கவுள்ளார்.

ADVERTISEMENT

தமிழகத்தினை சேர்ந்த யோகா சிரோன்மணி, யோகா ஆச்சார்யா, சித்தாந்த ரத்னா பட்டம் பெற்ற திருமதி. அம்ருதா ஆனந்த் M.E ., (M.Sc., M.Phil., Ph.D) அவர்கள் துபாயில் யோகாசனத்தில் உலக சாதனையை நிகழ்த்தவுள்ளார். இது இவரின் பத்தாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இவர் தனது பத்தாவது வயது முதலே யோகாசனத்தைக் கற்று வந்துள்ளார். உலகளவில் யோகா பயிற்சியாளராக பதிவு செய்யப்பட்டிருக்கும் இவர் அமெரிக்காவில் இயங்கும் யோகா அலைன்ஸ் நிறுவனத்தில் வழி நடத்தும் ஆசிரியராக இவர் உள்ளார் மற்றும் யோகாவில் ஒன்பது உலக சாதனைகளை இதுவரை செய்துள்ளார்.

ADVERTISEMENT

அவை:

2013 – இல் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 7 நிமிடம் 30 வினாடிகள் இருந்து உலக சாதனை செய்துள்ளார்.

2014 – இல் இரண்டாம் முதல் உலக சாதனையாக லகு வஜ்ராசனம் என்ற ஆசனாவில் 20 நிமிடம் இருந்துள்ளார். அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்

2015 – இல் மூன்றாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 2
மணி நேரத்தில் செய்து உலக சாதனை செய்துள்ளார்.

2015 – இல் நான்காம் உலக சாதனையாக வேகன் யோகா மாரத்தான் 27 மணி நேரம் 30 நிமிடம் செய்துள்ளார்.

2015 – இல் ஐந்தாம் உலக சாதனையாக 108 சூரிய நமஸ்காரம் 18 நிமிடத்தில் செய்துள்ளார்.

2017 – இல் ஆறாம் உலக சாதனையாக 108 யோகாசனத்தை நீரில் மிதந்துகொண்டு செய்துள்ளார்.

 

2018 – இல் ஏழாம் உலக சாதனையாக 1008 யோகாசனங்களை 4 மணிநேரம் 3 நிமிடத்தில் செய்துள்ளார் (மலேஷியா).

2019 – இல் எட்டாம் உலக சாதனையாக பூர்ண தனுராசனம் 15 நிமிடம் 10 வினாடிகள் செய்துள்ளார் (சீனா பெருஞ்சுவர்)

 

2020 – இல் ஒன்பதாம் உலக சாதனையாக ஏக பதசனம் 35 நிமிடம் செய்துள்ளார்.

தற்பொழுது துபாயில் நடக்கும் EXPO-2020 நிகழ்ச்சியில் 16.12.2021 அன்று மாலை 4.30 மணி அளவில் இந்தியன் பெவிலியன் அரங்கில் “யோகநித்ரா” என்ற யோகாசனத்தை உலக சாதனையாக செய்ய உள்ளார். எக்ஸ்போவிற்கு செல்லும் பார்வையாளர்கள் இந்தியன் பெவிலியன் சென்று இந்த நிகழ்வில் பங்கு பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து இவர் மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கின்றது கலீஜ் தமிழ் குழு.