ADVERTISEMENT

அஸ்ட்ராஜெனெகா பூஸ்டர் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த ஓமான்…!!

Published: 16 Jan 2022, 7:03 AM |
Updated: 16 Jan 2022, 7:01 PM |
Posted By: admin

ஓமானில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தற்பொழுது சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம்அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முந்தைய இரண்டு டோஸ்களைப் பெற்றவர்கள் தற்பொழுது அதே தடுப்பூசியின் பூஸ்டர் டோஸையும் போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவானது சமூகத் தடுப்பு மற்றும் தொற்றுநோயியல் நிலைமையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸை போட்டவர்கள் பூஸ்டர் டோஸினையும் விரைவில் எடுக்குமாறு அமைச்சகம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.