ADVERTISEMENT

2021 ம் ஆண்டில் மட்டும் சுமார் 500 இந்தியர்கள் மரணம்… முதன்முறையாக அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்த பஹ்ரைன்…!!

Published: 23 Jan 2022, 6:33 PM |
Updated: 23 Jan 2022, 7:56 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகள் அனைத்திலுமே பெருமளவு இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்தியாவில் இருந்து வந்து பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இதில் ஒன்றான பஹ்ரைனில் கடந்த ஆண்டு மட்டும் குறைந்தது 500 இந்தியர்கள் இறந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பஹ்ரைனின் மொத்த மக்கள்தொகையில் இந்தியர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இருந்தபோதிலும் இதுவே பஹ்ரைனில் பதிவு செய்யப்பட்ட இந்தியர்களின் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாகும்.

ADVERTISEMENT

நியூஸ் ஆஃப் பஹ்ரைனின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் மருத்துவ சிக்கல்களின் விளைவாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. பஹ்ரைனுக்கான இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவஸ்தவா, இந்த சூழ்நிலையை கையாள்வது தூதரகத்திற்கு சவாலான பணிதான். ஆனால் பஹ்ரைன் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக, பஹ்ரைனில் தினசரி COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 3,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT