ADVERTISEMENT

அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்கள் விசிட் விசாவில் வந்து வாகனங்களை ஓட்டலாமா…?? அதிகாரிகள் கூறுவது என்ன…??

Published: 23 Jan 2022, 1:28 PM |
Updated: 23 Jan 2022, 2:37 PM |
Posted By: admin

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளராக (resident) இருந்து, அமீரகத்தை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் அமீரகத்தில் விசிட் விசாவில் வந்தால், குடியிருப்பாளராக இருந்த போது வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸை வைத்து வாகனங்கள் ஓட்டலாமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். அதற்காகவே இந்த பதிவு. இது குறித்து உள்துறை அமைச்சகம் (MOI) வெளியிட்டுள்ள அறிக்கையில் “சுற்றுலாவாசியிடம் செல்லுபடியாகும் அமீரக ஓட்டுநர் உரிமம் இருக்கும் வரை அவர் அதைப் பயன்படுத்த முடியும்.” என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் அமீரகத்தின் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விசிட் விசாவில் வந்தாலும் வாகனங்களை ஓட்டலாம் என்பது தெளிவாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஓட்டுநர் உரிமம் எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும்?

புதிய ஓட்டுநர் உரிமம் அமீரக குடிமக்கள், GCC குடிமக்கள் மற்றும் பிற நாட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். உங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் போது, ​​UAE மற்றும் GCC குடிமக்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் மற்ற வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் வரை செல்லுபடி காலம் வழங்கப்படும். இருப்பினும், அமைச்சகத்தின் படி, சரியான அமீரக குடியிருப்பு விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி இருந்தால் மட்டுமே உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட்டர்கள் எந்த பிரிவில் ஓட்டலாம்?

அமீரகத்தின் முன்னாள் குடியிருப்பாளராக (resident) இல்லாமல் இருந்து, அமீரகத்திற்கு விசிட் விசாவில் வந்த நீங்கள் வாகனம் ஓட்ட விரும்பினால் பின்வரும் பிரிவின் கீழ் அமீரகத்தில் வாகனம் ஓட்ட உங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

1. சர்வதேச ஓட்டுநர் உரிமம்

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தின்படி, நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து சரியான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தால், அதன்படி நீங்கள் ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது உங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை ஓட்டலாம்.

2. குறிப்பிட்ட நாடுகளால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்

அதனைத் தவிர்த்து பின்வரும் நாடுகளின் குடிமக்களாக இருந்து ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் சுற்றுலாவாசிகளுக்கு மட்டும் தங்கள் சொந்த நாட்டின் உரிமத்தில் அமீரகத்திலும் வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள்

  • அனைத்து GCC நாடுகள்
  • ஆஸ்திரேலியா
  • ஆஸ்திரியா
  • பெல்ஜியம்
  • ஸ்பெயின்
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்
  • அயர்லாந்து
  • நெதர்லாந்து
  • இத்தாலி
  • இங்கிலாந்து
  • துருக்கி
  • கிரீஸ்
  • சுவிட்சர்லாந்து
  • நார்வே
  • டென்மார்க்
  • ஸ்வீடன்
  • ருமேனியா
  • போலந்து
  • பின்லாந்து
  • போர்ச்சுகல்
  • கனடா
  • அமெரிக்கா
  • தென் கொரியா
  • ஹாங்காங்
  • சிங்கப்பூர்
  • ஜப்பான்
  • நியூசிலாந்து
  • தென்னாப்பிரிக்கா