ADVERTISEMENT

அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்…!!

Published: 19 Jan 2022, 7:29 AM |
Updated: 19 Jan 2022, 8:53 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ஹவுதி பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், செவ்வாயன்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும், இந்த அழைப்பின் போது, ​​டாக்டர் ஜெய்சங்கர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொது பகுதிகள் மற்றும் வசதிகள் மீது ஹவுதி போராளிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை, அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியாவின் முழு ஒற்றுமையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்த இரு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் வலுவான உறவுகளையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த பயங்கரவாதச் செயலில் பலியானவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த தாக்குதலில் இறந்த மூவரில் இருவர் இந்தியர் என்பதும் காநமடைந்த 6 பேரில் இரண்டு பேர் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.