ADVERTISEMENT

ஓமான்: வெளிநாட்டவர்களுக்கு சவுத் அல் பதினாவில் இலவச கொரோனா தடுப்பூசி சேவை…!!

Published: 20 Feb 2022, 8:04 AM |
Updated: 20 Feb 2022, 8:04 AM |
Posted By: admin

ஓமானில் பிப்ரவரி 20, 2022 ஞாயிற்றுக்கிழமை முதல், சவுத் அல் பாதினா கவர்னரேட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து சவுத் அல் பாதினாவில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் கூறுகையில்,: “வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் மற்றும் கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்கள் ருஸ்தாக் மற்றும் பர்காவில் உள்ள மெடிக்கல் ஃபிட்னஸ் சென்டர்களில் காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இலவசமாக வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.

எனவே, இப்பகுதியில் உள்ள வெளிநாட்டவர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT