இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் துவங்கவிருப்பதை முன்னிட்டு சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கு ஏப்ரல் 1, ஷாபான் 29 ஆம் தேதி மாலை ரமலான் பிறையைப் பார்க்க அழைப்பு விடுத்துள்ளது.
பிறையைப் பார்த்து ரமலான் மாதத்தின் தொடக்கம் உறுதிசெய்யப்பட்டால் இஸ்லாமியர்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு வைக்க தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 30 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றம் பிறையை வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பார்ப்பவர்கள் அருகிலுள்ள நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி தங்கள் சாட்சியத்தை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில், அவர்கள் பிறையைப் பார்த்த பின்னர் தங்கள் பகுதியில் உள்ள பிராந்திய மையத்தின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.