ADVERTISEMENT

இயல்பு நிலைக்கு திரும்பும் ஓமான்..!! பயணிகளுக்கு PCR டெஸ்ட் இல்லை.. மாஸ்க் அணிய தேவையில்லை.. முழுவிபரம் உள்ளே..!!

Published: 1 Mar 2022, 2:45 PM |
Updated: 1 Mar 2022, 3:00 PM |
Posted By: admin

கொரோனா தொற்றானது ஓமானில் குறைந்து வருவதைத் தொடர்ந்து நாட்டில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கொரோனாவிற்கான உச்சக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய தளர்வுகள் இன்று (மார்ச் 1) முதல் அமலுக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

புதிய தளர்வுகள்

1. ஓமான் அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் PCR பரிசோதனை அறிக்கை இல்லாமலேயே ஓமன் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படும்.

2. மூடிய இடங்களில் மட்டுமே முக கவசம் அணிவது கட்டாயமாகும். வெளிப்புற இடங்களில் விருப்பபட்டால் போட்டுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

3. ஹோட்டல்கள் 100 சதவீத திறனில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 100 சதவீத திறனுடன் வகுப்புகளை மீண்டும் தொடங்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த வகுப்புகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் மற்றும் மார்ச் 6, 2022 முதல் தொடங்கும்.

மேலும் அரங்குகள், கூடாரங்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் மற்றும் பிற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகள் 70 சதவீத திறனுடன் நடத்தப்படலாம் என்றும் குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT