ADVERTISEMENT

உக்ரைன் போர்: ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்.. இந்திய வெளியுறவுத்துறை தகவல்..!!

Published: 1 Mar 2022, 2:03 PM |
Updated: 1 Mar 2022, 2:06 PM |
Posted By: admin

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நடந்து வரும் போரில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்போது கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகைரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இந்திய மாணவர் குண்டு வெடிப்பு தாக்குதலில் சிக்கி பலியாகிவிட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் பயின்று வந்த இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர், கார்கிவ் நகரை விட்டு வெளியேற ரயில் நிலையத்திற்கு சென்ற பொது ரஷ்ய படையினர் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கி பலியாகியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்துள்ள இந்திய மாணவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன் உக்ரைனில் இருக்க கூடிய இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டின் தூதர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

உக்ரைனில் பயின்று வரும் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்களும் நாடு திரும்ப முடியாமல் உக்ரைன் நாட்டின் பார்டர்களிலும், மெட்ரோ நிலையங்களிலும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT