ஓமானின் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் மற்றவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்-தாஹிரா கவர்னரேட்டில் உள்ள இப்ரியில் இருக்கும் குவாரியில் இந்த பயங்கர பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நிகழ்ந்த தொடர் சரிவுகள் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் ஓமானின் குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்தியில், “பாறை சரிவுகள் இன்னும் தொடர்கின்றன மற்றும் காணாமல் போனவர்களைத் தேடுவதில் இடையூறாக உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிவிப்பில், “இதுவரை ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.