ஓமானில் இன்று ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக ஓமானின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ஷஃபான் மாதத்தின் இறுதி நாளென்றும் நாளை முதல் ரமலான் மாத நோன்பு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகள் சவூதியை பின்பற்றி ரமலான் மாதத்தை அறிவித்தாலும் ஓமான் மட்டும் அடுத்த நாள் நோன்பு வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
அதே போல் இன்று மற்ற வளைகுடா நாடுகளில் முதல் நோன்பு முடிந்திருந்தாலும் ஓமானில் முதல் நோன்பு நாளை தான் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.