ADVERTISEMENT

அபுதாபி: உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! காயமடைந்தவர்களில் 106 பேர் இந்தியர்கள் என தூதரகம் தகவல்..!!

Published: 25 May 2022, 2:24 PM |
Updated: 25 May 2022, 2:29 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்த வாரம் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 120 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திங்களன்று கலிதியா பகுதியில் உள்ள ஃபுட் கேர் உணவகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 106 இந்தியர்கள் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் ஒரு இந்தியர் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அபுதாபி முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று, அபுதாபியின் சுகாதாரத் துறையின் (DoH) மூத்த அதிகாரிகள் காயமடைந்த பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது.

அபுதாபியில் உள்ள சுகாதாரத் துறையின் தலைவர் அப்துல்லா பின் முகமது அல் ஹமத் மற்றும் DoH இன் துணைச் செயலாளர் டாக்டர் ஜமால் முகமது அல் காபி ஆகியோர் காயமடைந்தவர்களிடம் சென்று பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT