ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலையான கடல் மட்டத்திலிருந்து 1,934 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஜெபல் ஜெய்ஸ் மலைப்பகுதிக்கு செல்லும் சாலையை தற்போது முடிந்த ஈத் அல் ஃபித்ரின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் 17,000 கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராஸ் அல் கைமா பொதுச் சேவைத் துறை அறிவித்துள்ளது.
RAK பொது சேவைகள் துறையின் இயக்குநர் ஜெனரல் அஹ்மத் முகமது அல் ஹம்மாடி கூறுகையில், விடுமுறையின் முதல் இரண்டு நாட்களில் ஜெபல் ஜெய்ஸுக்குச் சென்று ஈத் அல் பித்ரைக் கொண்டாடிய பார்வையாளர்கள், மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 60,000 என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெவ்வேறு தேசங்கள் மற்றும் வயதினரைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.
ஈத் அல்-ஃபித்ர் விடுமுறையின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில், ராஸ் அல் கைமாவின் மிகப்பெரிய பொதுப் பூங்காவான சக்ர் (saqr) பொதுப் பூங்காவிற்கு, 1,000க்கும் மேற்பட்ட கார்களும் 3,000 பார்வையாளர்களும் சென்றுள்ளதாக அல் ஹம்மாடி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ராஸ் அல் கைமாவின் புகழ்பெற்ற இயற்கை அடையாளங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் பொது பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா வசதிகள் ஆகியவை தற்போதைய ஈத் விடுமுறையில் அதிக எண்ணிக்கையிலான வருகையைக் கண்டதாகவும், குறிப்பாக ராஸ் அல் கைமா டவுன்டவுனில் உள்ள அல் கவாசிம் கார்னிச்சிற்கு அதிகளவு மக்கள் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.