இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கான டிக்கெட் விலையில் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
இந்த சலுகை டிக்கெட் விலையில், துபாயில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் விமான சேவைகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் ஜூன் 22 வரை துபாய் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் வெறும் 299 திர்ஹம்ஸில் பயண டிக்கெட்டை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் துபாயில் இருந்து தமிழகம் செல்லவிருக்கும் நண்பர்களுக்கு இது ஒரு சிறந்த சலுகையாகும். தற்சமயம் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் துபாய் மக்தூம் சர்வேச விமான நிலையத்திற்கு விமான சேவைகளை திருப்பி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#FlyWithIX : Daily flights connecting Dubai(DWC) to Trichy & Mangaluru✈️
Attractive fares starting from AED 2️⃣9️⃣9️⃣*
Book Now!
*T & C Apply pic.twitter.com/m1tZdc4ZF5
— Air India Express (@FlyWithIX) May 12, 2022