ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் வரவிருக்கும் நீண்ட ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் போது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் புத்தம் புதிய லைட் ஷோ மற்றும் புதிய வடிவில் துபாய் ஃபவுண்டைன் ஷோ நிகழ்த்தப்படுவதை கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இதுவரை பார்த்திராத அளவில் LED விளக்குகளுடன் சிறப்பாக புர்ஜ் கலீஃபா மற்றும் டவுன்டவுன் துபாய் வானை ஒளிரச் செய்து புனித ரமலான் மாதத்தின் முடிவைக் கொண்டாடும் என கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, துபாய் ஃபவுண்டைன் ஷோ நீண்ட ஈத் வார இறுதியில் ஒவ்வொரு இரவும் இரவு 8 மணிக்கு நடைபெறும் என்றும் இந்த புதிய பிரமிக்க வைக்கும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துபாய் ஃபவுண்டன் ஷோ நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் கூடுதல் நேரங்களிலும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. டவுன்டவுன் துபாய்க்கு வருபவர்கள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஃபவுண்டன் ஷோக்களைப் பார்க்க முடியும் என்றும், மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மாலைக் காட்சிகள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.