ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று பரவலாக வீசி வரும் கடுமையான தூசி புயல்..!! பொதுமக்கள் அவதி..!!

Published: 24 May 2022, 5:49 PM |
Updated: 24 May 2022, 5:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கடும் தூசிப்புயல் வீசும் என தேசிய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில்  அது போலவே அமீரகத்தில் பரவலாக தூசிப்புயல் வீசிவருகிறது. இந்த தூசி அமீரகத்தின் சில பகுதிகளில் பார்வைத்திறனை (visibility) 100 மீட்டருக்கும் குறைவாக மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) ட்வீட் செய்த ஒரு வீடியோ, நாட்டின் மேற்குப் பகுதிகளில் இருந்து தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி புயல் எவ்வாறு நகரும் என்பதைக் காட்டுகிறது. அதில் அபுதாபியில் பல பகுதிகளில் பார்வைத் திறன் 1,000 மீட்டராகக் குறைந்துள்ளதாக NCM உறுதிப்படுத்தியுள்ளது.

அல் ஹம்ரா (அல் தஃப்ரா) மற்றும் உம் அல் ஷீஃப் தீவில் 100 மீட்டர் குறைவான பார்வைத் திறன் பதிவாகியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வீசும் இந்த தூசி படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான தூசி நிறைந்த வானிலை அடுத்த சில நாட்கள் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமீரகம் மட்டுமல்லாது குவைத், ஈராக் ஆகிய நாடுகளிலும் கடுமையான தூசி புயலால் விமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.